இலங்கை தமிழ் ஊடக வரலாற்றினில் திருப்பு முனையாக யாழ்ப்பாணத்தினில்
மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையமொன்று
யாழ்ப்பாணத்தினில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின்
ஏற்பாட்டினில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும்
யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களிற்கு ஊடக வாண்மை விருத்தி கற்கை நெறிகளை
முன்னெடுக்கவுள்ளது. ஊடக வாண்மை விருத்தி கற்கை நெறிகளை முன்னெடுக்க
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் நிதி அனுசரணையினை வழங்க முன்வந்துள்ளது.
மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையத்தினை உத்தியோகபூர்வமாக மூத்த ஊடகவியலாளர்கள் ராதேயன் மற்றும் ஜயா.சச்சிதானந்தன் ஆகியோர் நாடா வெட்டி திறந்து வைத்திருந்தனர்.நிகழ்வுகளிற்து யாழ். ஊடக அமையத்தின் பிரதி தலைவர் மரியதாஸ் நியூட்டன் தலைமை தாங்கியிருந்தார்.மறைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் உறவுகளிற்கான அஞ்சலியுடன் ஆரம்பமான நிகழ்வினில் சுடரை வடமாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் -எழிலன் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆசியுரைகளை திருமதி. அனந்தி சசிதரன் -எழிலன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ஜயா.சச்சிதானந்தன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
ஊடகத்துறையின் வலுவென்பதை தான் கடந்த தேர்தல் காலத்தினிலேயே புரிந்து கொண்டதாக தெரிவித்த அனந்தி சசிதரன் தன்னை மக்கள் முன் கொண்டு செல்வதிலும் வெற்றி பெற வைப்பதிலும் ஊடகங்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு அவர் நன்றி கூறினார்.அதிலும் தனது வீட்டினில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிலிருந்து தன்னையும் தனது ஆதரவாளர்களையும் காப்பாற்றியதிலும் அவர்களது பங்கை நினைவு கூர்ந்தார்.
உத்தியோகபூர்வமான விரிவுரையாக செவ்வி காண்பதற்கான முறைமைகளும் காண்பவர்கள் வளர்த்;துக்கொள்ள வேண்டிய திறன்களும் எனும் தலைப்பினில் கலாநிதி வணபிதா.ரூபன் மரியாம்பிள்ளையினால் ஆற்றியிருந்தார்.பிஸப் சௌந்தரம் ஊடக கற்கை மைய இயக்குநரான அவர் தமிழ் ஊடகப்பரப்பினில் தனது கலாநிதிக்கான கற்கையினை மேற்கொண்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் நிதி அனுசரணையின் கீழான கற்கை நெறிகளினில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை ஆற்றவுள்ளனர்.

0 Responses to யாழினில் மாமனிதர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்த ஊடக கற்கை மையம்!!