கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கு கொள்ளக்கூடாதென்பதை, பிரதமர் கமரூன் அரசிற்கு வலியுறுத்தும் முகமாக பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்தானியத் தமிழர் பேரவை கடந்த சில மாதங்களாகவே சந்தித்து வருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், சந்திப்புகளின் தொடர்ச்சியாக மேலும் நான்கு பாராளுமன்ற உறுபினர்களை சந்தித்து, ஏன் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று விளக்கியதோடு மகஜர்களையும் கையளித்தனர்.
பிரித்தானிய அரசின் கூட்டணிக் கட்சியான Lib-Dem சார்ந்த வர்த்தகத்துறை அமைச்சர் வின்ஸ் கபேல் (Vince Cable), மேலும் அதே கட்சியைச் சேர்ந்த, Kingston Surbiton தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி (ED Davey) , ஆகியோருடனான சந்திப்பும், ஆளும் மிதவாத கட்சியைச் சேர்ந்த, Wolverhampton South West க்கான பாராளுமன்ற உறுப்பினர் போல் சிங் உப்பல்(Paul Singh Uppal) உடனான சந்திப்பின் போது, நீங்கள் என் முன் வைத்த விடயங்களை வெளிவிவகார அமைச்சிற்கும், அது சார்ந்த அமைச்சர்களது கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று உறுதியளித்தனர்.
தெற்கு Leicester க்கான, தொழிற் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், ஜோன் அஷ்வோர்த் (Jon Ashworth) உடனான சந்திப்பின் போது, இந்த விடயத்தை பற்றி ஏற்கனவே தான் நன்கு அறிந்திருப்பதாகவும், முற்று முழுதாக உங்கள் கோரிக்கையை ஆதரிக்கின்றேன் என்றும், இது பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதுவதாகவும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் உறுதியளித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய கலந்து கொள்வதினை எதிர்க்கும் முகமாக, எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி 4 மணியளவில், Embankment லிருந்து மாபெரும் கண்டன பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

0 Responses to பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தும் தமிழர் பேரவையின் போராட்டம் தொடர்கிறது