Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டுபாயின் விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் தனது வாழ்நாளில் மிகப்பெரிய மைல்கல்லை ஞாயிற்றுக் கிழமை எட்டியுள்ளது.

அதாவது உலகின் மிகப்பெரிய விமான நிலையமும் உலகின் 2 ஆவது மிகப் பெரிய பயணிகள் விமானமுமான அல்-மஹ்தும் சர்வதேச விமான நிலையம் துபாயில் ஞாயிற்றுக் கிழமை திறக்கப் பட்டுள்ளது. முதல் வெள்ளோட்டமாக புடாபெஸ்டில் இருந்து பயணிகள் விமானம் அல்-மஹ்தும் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக் கிழமை தரை இறங்கிப் பெருமை அடைந்தது. அல்-மஹ்தும் விமான நிலையம் டுபாயின் வேர்ல்ட் சென்ட்ரலில் டுபாய் அரசால் நிறுவப்பட்ட இலவச பொருளாதார பிரதேசமான ஏவியேஷன் நகரம் என அழைக்கப் படும் பரந்த இடத்தில் அமைந்துள்ளது. இன்னமும் முற்றுப் பெறாத இவ்விமான நிலையத்தின் கட்டுமானம் 2027 ஆம் ஆண்டில் நிறைவு பெறும் வேளையில் பரப்பளவிலும் பயணிகள் எண்ணிக்கையிலும் உலகின் மிகப் பெரும் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறும்.

எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான டுபாயின் முன்னைய சர்வதேச விமான நிலையம் இப்புதிய விமான நிலையத்தில் இருந்து வடக்கே 50 Km தொலைவில் அமைந்துள்ளது. இதேவேளை அல்-மக்தும் விமான நிலையம் டுபாய் அரசுக்குச் சொந்தமானது என்பதுடன் டுபாய் விமான நிலைய கம்பெனியால் இயக்கப் படும் எனத் தெரிய வருகின்றது. 2010 ஆம் ஆண்டு முதல் கார்கோ விமானங்களுக்குத் திறக்கப் பட்ட இந்த விமான நிலையத்தின் கட்டுமானத்துக்கான முழுச் செலவு $32.67 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்-மஹ்தும் விமான நிலையம் ஒரு வருடத்துக்கு 160 மில்லியன் பயணிகளையும் 12 மில்லியன் டன் கார்கோக்களையும் கையாளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

0 Responses to டுபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் இன்று பயணிகள் சேவைக்காகத் திறப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com