இன்று சனிக்கிழமை பாகிஸ்தானில் சிறுவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வரும் முகாம் ஒன்றில் சேவையாற்றி வந்த 11 ஆசிரியர்களைப் போராளிக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஆட்கொல்லி நோயானா போலியோவை விரட்டுவதற்காக முயற்சி செய்து வரும் சுகாதார பணியாளர்கள் மீது சமீபத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அண்மையிலுள்ள கைபர் ட்ரிபல் ஏஜன்ஸியின் பாரா பகுதியிலுள்ள தனியார் ஹிரா பொது மக்கள் பாடசாலையில் இருந்தே இந்த ஆசிரியர்கள் கடத்திச் செல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரியான கையாலி குல் தகவல் தருகையில் லஷ்கர் ஏ இஸ்லாம் குழுவுடன் தொடர்புடைய தலிபான் இயக்கத்தின் தலைவர் மங்கல் பாஹ் இனால் கட்டுப் படுத்தப் படும் ஒரு பிரதேசத்துக்கு துப்பாக்கிதாரிகளால் இந்த சுகாதார ஆசிரியர்கள் கடத்திச் செல்லப் பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
மங்கல் பாஹ் மற்றும் அவரின் போராளிகள் பாகிஸ்தானில் சுறுவர்களுக்கு அளிக்கப் படும் போலியோ தடுப்பு மருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிறுவர்களுக்கு இம்மருந்து வழங்கப் படுவதை எதிர்த்தும் வருகின்றனர். இதேவேளை இன்னொரு கைபெர் அதிகாரி கருத்துரைக்கையில் உள்ளூர் பெரியவர்களுடன் சில உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் குறித்த ஆசிரியர்கள் போராளிகளால் விடுவிக்கப் படலாம் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் போலியோ தடுப்பு மருந்தை எதிர்ப்பதற்கு முக்கிய் காரணமாக இதை வழங்கும் மேற்குலக பணியாளர்கள் அமெரிக்க உளவாளிகளாகச் செயற்படுகின்றனர் என்ற சந்தேகம் இருப்பதால் தான் ஆகும். இது குறித்து ஒரு போராளித் தலைவர் கூறுகையில், முதலில் அமெரிக்கா எமது பிரதேசங்களில் டிரோன் விமானத் தாக்குதல்களை நிறுத்தட்டும். அதன் பின்னர் நாம் போலியோ தடுப்பு மருந்துகளை அனுமதிக்கின்றோம் என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 தசாப்தங்களில் உலகம் முழுதும் போலியோ ஆட்கொல்லி நோய் 99.9% வீதம் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் இந்நோய் இன்னமும் நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே சவாலான ஒன்றாக இருந்து வருகின்றது.

0 Responses to போலியோ முகாமில் இருந்து 11 ஆசிரியர்களைக் கடத்திய பாகிஸ்தான் போராளிகள்