நாம் அனைவரும் அறிந்தபடி, நவம்பர் மாதம் 15 இலங்கையில் காமன்வெலத் மாநாடு ஆரம்பித்தது, பின்னர் முடிவடைந்தது அவ்வளவுதான். இதற்கு மேலாக பிரித்தானிய மகாராணி செல்லவில்லை, அவருக்கு பதிலாக இளவரசர் சாள்ஸ் சென்றதோடு பிரித்தானியப் பிரதமர் சென்றுள்ளார். ஆனால் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது பலருக்கு தெரியாது. அதிரும் இந்த நிஜங்களை பார்போமா?
காமன்வெலத் நாடுகளின் தற்போதைய தலைவரும் இலங்கை அதிபரின் மிக நெருங்கிய நண்பருமான கமலேஷ் ஷர்மாவின் ஏற்பாட்டில் தான், இலங்கையில் இம் மாநாடு நடைபெற உத்தேசிக்கப்பட்டது. இம் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவது இல்லை என்று கனடா பிரதமர் ஏற்கனவே அறிவித்துவிட்டதோடு மொரீஷஸ் பிரதமரும் மற்றும் இந்தியப் பிரதமரும் இதில் கலந்துகொள்ளவில்லை என்று தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது தான் இல்லை. அதாவது சுமார் 28 நாடுகளின் தலைவர்கள் இலங்கை செல்லவில்லை என்பது தான் உண்மை நிலை ஆகும். அதற்காக அந்த 28 நாடுகளும் மாநாட்டை புறக்கணித்ததாக பொருள் அல்ல. இந்தியா போல தனது வெளிநாட்டு அமைச்சரை இல்லையென்றால் மிக முக்கியமான அமைச்சரை அனுப்பிவிட்டு பல நாடுகளின் தலைவர்கள் இலங்கை செல்லாது கடைசிநேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டார்கள்.
அதாவது காமன்வெலத் நாடுகள் என்னும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இன்றுவரை நடைபெற்ற மாநாடுகளில் மிகவும் மோசமான மற்றும் கேவலமான மாநாடு இது தான் என்கிறது ஆபிரிக்காவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று. 53 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் மாநாடுகள், அனேகமாக வேறு நாடுகளில் நடைபெறும் போது குறைந்தது 39 தொடக்கம் 49 வரையிலான தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அனால் இம் முறை கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் தான், இதுவரை காலத்திலும் (வரலாற்றில்) குறைந்த உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் இம் மாநாடு தோல்வியை தழுவிக்கொண்டுள்ளதாக ஆபிரிக்க ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் விட்ட கதையாக, உலகத் தலைவர்களை கொழும்புக்கு அழைத்து, இலங்கையின் மனித உரிமை தொடர்பாக பேசவைத்துள்ளார் மகிந்தார்.
மகிந்தர் 2009ம் ஒரு கணக்கு போட அது 2013ல் பிழைத்துவிட்டது. பெரும் பணச்செலவு, கடும் பாதுகாப்பு, அலைச்சலுக்கு மத்தியில் , வாங்கிக்கட்டிக்கொண்டது தான் மிச்சமாக உள்ளது. இருப்பினும் இம் மாநாடு இலங்கையில் நடைபெற்ற காரணத்தால் கமலேஷ் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக காமன்வெலத் நாடுகளின் அடுத்த தலைவராக மகிந்தர் வர வாய்புகள் உள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் தற்போதே தமிழர்கள் இறங்குவது நல்லது. பின்னர் இறுதி நேரத்தில் இதுதொடர்பாக போராட்டங்களை நடத்தி எதுவித லாபமும் கிடைக்கப்போவது இல்லை.
athirvu.com

develop is happening in SL. no need to worry. LTTE killed thousands of civilians including tamils.