பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மிகவும் இரகசியமாக பேணப்பட்ட பாதுகாப்பு செயலாளரின் இந்திய விஜயத்தின் இறுதி நாளான நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அவர் இந்திய பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சல்மான் குர்சித்தை சந்தித்த போது, 13ம் திருத்தச் சட்டத்திற்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
13ம் திருத்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் முக்கிய அரசாங்க தரப்பு உறுப்பினர்களில் முதன்மையானவர் கோட்டாபயராஜபக்ச.
அவர் இது தொடர்பில் சல்மான் குர்சித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றமையானது, எதிர்வரும் காலத்தில் 13ம் திருத்தச்சட்டத்தின் மீது பாரிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகியுள்ளமையை எடுத்துக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to கோட்டாபய குர்ஷித் இரகசிய சந்திப்பு! 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வு!