Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலி பலர்மோவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் தேசியக் கொடி ஏற்றல் மலர்வணக்கம் எழுச்சி கானங்கள் விடுதலை நடனங்கள் கவிதைள் பேச்சுக்கள் நாடகம் மற்றும் சிறப்புரைகள் இத்தாலி பாராளமன்ற உறுப்பினர்களும் பலெர்மோ மானகரசபை உறுப்பினர்களும் உரை நிகழ்த்தினார்கள் இன்னும் பல எழுச்சி நிகழ்வுகளும் இடம் பெற்றது .

இவ் நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடியினை பிரித்தானியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற் பாட்டாளரும் அறப் போராளியுமான சிவந்தன் கோபி அவர்கள் ஏற்றிவத்தார் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தங்கள் உணர்வு பூர்வமான அஞ்சலியை செலுத்தினர் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுநம்புங்கள் திமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு உறுதி எடுத்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.

0 Responses to இத்தாலி பலர்மோவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com