Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2014 ஆம் ஆண்டு 5.2 வீதமாக காணப்படும் இலங்கையின் வரவை மீறிய செலவு, 2016ஆம் ஆண்டளவில் 3.8 வீதமாக குறைவடையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.04 மணியவில் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றினார்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) இன்றைய வரவு செலவுத் திட்ட உரையினை புறக்கணித்தன. ஆனாலும், மற்றொரு எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமர்வுகளை புறக்கணிக்காது பங்கெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்றைக்கு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முன்வைக்கப்பட்ட 68வது வரவு செலவுத் திட்டமாகும். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைத்த 8வது வரவு செலவுத் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டரை மணி நேரம் நீண்ட ஜனாதிபதியின் இன்றை வரவு செலவுத் திட்ட உரையில் சுட்டிக்காட்டப்பட்ட சில விடயங்கள்,

1. பொதுநவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கைக்கு வெற்றியையும், அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.
2. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்பதை காட்டியுள்ளோம்.
3. நாட்டின் பொருளதார வளர்ச்சி 7 வீதமாக உயர்ந்துள்ளது.
4. அரச வங்கிககள் தனியார் மயமாகாது.
5. வெளிநாட்டினருக்கு காணிகளை விற்க முடியாது. குத்தகைக்கே விட முடியும். அதற்கான காணி 15 வீதம்
6. மோதல்களுக்கு பின் 1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.
7. 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம். 68 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தொழில் முயற்சி உதவி
8. சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 250,000 ரூபா வரையிலான கடன்
9. யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம், பதுளை, காலி வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகள்
10. கிராமியp பாடசாலைகளின் சுகாதாரத்தை விருத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
11. 1500 மில்லியன் டொலர் சுற்றுலா வருமானத்தை எதிர்பார்ப்பு

0 Responses to 2016 இல் வரவை மீறிய செலவு 3.8 வீதமாக குறையும்:வரவு செலவு திட்ட உரையில் மஹிந்த ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com