பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்காகப் போராடி வருபவருமான மலாலா யூசுஃப்சாய்க்கு ஐரோப்பிய யூனியனின் உயர் விருதான சகோரோவ் மனித உரிமைகள் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே இவ்வருடத்தின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டு மிகவு எதிர்பார்க்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமிகளின் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்ததற்காக தலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா தற்போது லண்டனில் தனது குடும்பத்தினருடன் தங்கி கல்வி வருவதுடன் தனது பெயரில் ஓர் அமைப்பை நிறுவி தொடர்ந்து சிறுவர் கல்வி உரிமைக்காகப் போராடி வருகின்றார். இந்நிலையில் தான் நேற்று புதன்கிழமை கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராஸ்போர்க் நகரில் நடைபெற்ற விழாவில் மலாலாவுக்கு 50 000 யூரோக்கள் பெறுமதியுடைய சாகோரோவ் விருது ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் மார்டின் ஸ்கல்ஸினால் வழங்கப் பட்டது.
விருதை வென்ற பின்னர் பேட்டியளிக்கும் போது மலாலா இப்பரிசை உலகம் முழுதும் மனித உரிமைக்குப் பாடுபடும் பிரச்சாரர்களுக்கு இதை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மலாலா மேலும் இவ்வாறு கூறினார். 'ஒரு நாட்டின் பலம் அதன் இராணுவ வலிமையைக் கொண்டு அளவிடப் படக் கூடாது. பதிலாக அந்நாட்டில் வசிக்கும் கல்வி அறிவு உடையவர்களின் எண்ணிக்கையால் மதிப்பிடப் பட வேண்டும்! உலகில் பல இடங்களில் இன்னமும் வறுமை உள்ளது! சுதந்திரத்துக்குத் தடங்கல் உள்ளது! பயமும் தீவிரவாதமும் உள்ளது! இருந்த போதும் நம் எல்லோர் மனதிலும் மாற்றத்துக்கான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருப்பது தான் முக்கியமானது!'
இதைவிட, 'நாம் அனைவரும் இங்கு கூடியிருப்பது சிறுவர்களுக்கு உதவவும், அவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தான். இச்சிறுவர்கள் வேண்டுவது ஓர் ஐ போன் அல்லது ப்ளே ஸ்டேஷன் கேம் அல்லது சாக்லெட் அல்ல. மாறாக இவர்களில் பலருக்குத் தேவைப் படுவது ஒரு புத்தகமும் பேனாவும் தான்! என்றும் மலாலா கூறியிருந்தார்.

0 Responses to ஐரோப்பிய யூனியனின் சக்காரோவ் விருதை வென்றார் மலாலா