சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிலா. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வடசென்னிமலை கோவிலில் கடந்த மாதம் 23–ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். 10 நாட்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். அதன் பிறகு அவர்களுக்கிடையே தகராறு ஏற்படத் தொடங்கியது.
இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு கணவன் மனைவி இடையே ஏற்படவே ஆத்திரம் அடைந்த நிலா நீ தங்கத்தில் செய்தா தாலி போட்டாய், “கவரிங்” நகையில் தானே தாலி போட்டாய் என்று கூறி தாலியை கழற்றி அவரது முகத்தில் வீசி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவளது கணவன் மணிகண்டன் மனைவி நிலாவை சரமாரியாக தாக்கினார். இதில், காயமடைந்த நிலா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதே போல, தன்னை மனைவி தாக்கி விட்டதாக கூறி மணிகண்டனும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிலாவின் அண்ணன் பாரதி என்பவர் ஆத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், நிலாவின் கணவர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் நிலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன.

0 Responses to திருமணமான 25 நாளில் கசந்தது வாழ்க்கை; கணவன் முகத்தில் தாலியை கழற்றி வீசிய மனைவி