இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் காமன்வெல்த் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பங்கேற்றார். அவருடன் இம்மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக சேனல் 4 தொலைக்காட்சி இயக்குநர் கெலும் மெக்ரே தனது குழுவினருடன் வந்திருந்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பின்போது இலங்கை அதிபர் ராஜபக்சே, காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் பேட்டி அளித்தனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சேனல் 4 தொலைக்காட்சி குழுவினர் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த இந்நிறுவன இயக்குநர் கெலும் மெக்ரேவும் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து தன்னை சூழ்ந்த பத்திரிûகாயாளர்களிடம் கெலும் மெக்ரே பேசுகையில்,
இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் முழுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு வந்தபிறகுதான் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. என் பின்னால் இலங்கை புலனாய்வு பிரிவினர் சுற்றி வருகின்றனர். செய்தியாளர்கள் மாநாட்டில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படிஇருக்கும்போது இலங்கையில் எங்கே பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது.
சேனல் 4 தொலைக்காட்சி எப்போதும் உண்மைகளைத்தான் வெளியிடும். பத்திரிக்கை சுதந்திரம் இருப்பதாக கூறப்படும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எங்களை அனுமதிக்காதது பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவது போலாகும்.
என்னை புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து வந்தாலும் அதற்கு நான் அஞ்சப்போவதில்லை. அதேநேரம் உண்மையை வெளிக்கொணர்வதற்கும் நான் தயங்கப்போவதில்லை என்றார்.

0 Responses to இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் இல்லை: உண்மையை சொல்ல அஞ்சப்போவதில்லை: சேனல் 4 இயக்குநர் கெலும் மெக்ரே