இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதி்ர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும், இல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் போது சர்வதேச விசாரணைக்கான அழைப்பினை விடுக்கவுள்ளதாவும், அதன் போது இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மோதல்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இலங்கை பொறுப்பினை நிறைவேற்றாத பட்சத்தில்; சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும்: டேவிட் கமரூன்