Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் மாநாடு 16.11.2013 சனிக்கிழமை சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் மதிமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ்  தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மூத்த வழக்கறிஞர் கே.எஸ். தினகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் ஒன்றில்,

ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்து அவர்களுக்கு அரசியலில் சமஉரிமையையும் சுதந்திரமான வாழ்வும் அமைய தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப்புலிகள் போராடினார்கள். அவர்களது விடுதலை வேட்கையைப் பயங்கரவாதம் என்று சிங்கள அரசு கொச்சைப்படுத்தியது.

உலகில் எந்தவொரு இனமும் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைப் பின்பற்றி வந்த இந்திய அரசும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றே கருதி விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்தும் தமிழ்நாட்டையும் சேர்த்து தமிழ் ஈழம் அமைக்க புலிகள் போராடுவதால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து எனப் பொய்க் காரணம் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளது.

சிங்களவரோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்ட பின்புதான் தனி ஈழக் கோரிக்கையும், அதற்கான போராட்டமும் விடுதலைப்புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான தடை நியாயமற்றது. தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூட தமிழ் ஈழத்தில் இணைக்க புலிகள் முயலவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்தில் கியூ பிராஞ்ச்சைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்று பொய்வழக்குகள் தொடர்வதையும், அதை அடிப்படையாக வைத்து தமிழக அரசு விடுதலைப்புலிகள் அமைப்பு மீதுள்ள தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதற்குத் துணைபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குக! மதிமுக வழக்கறிஞர் மாநாட்டில் தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com