பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியை நாட்டுக்குள் அனுமதித்து இலங்கையைப் பற்றி புதிய ஆவணப்படங்களை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டிற்காக சனல்4 ஊடகவியலாளர்களுக்கு வீசா வழங்கிவிட்டு அரசாங்கம் மறைந்து கொண்டுவிட்டது. இது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்று அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் கிரியெல்ல மேற்கண்ட விடயங்களைக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவது போல், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இது, நாட்டுக்கு சிக்கல்களையே ஏற்படுத்தும். பொதுநலவாய மாநாட்டின் மூலம் இலங்கைக்கு எந்தவொரு பயனும் இல்லை. இது, அரசாங்கத்திற்குள் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலருக்கே தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தெளிவற்ற கொள்கைகளோடு செயற்படுகின்றது. சர்வதேசம் தொடர்பில் சில நேரங்களில் சந்தோசம் கொள்கிறது. இன்னும் சிலவேளையில் துக்கம் கொள்கிறது. நிலையான, தீர்க்கமான கொள்கைகள் அற்ற தன்மையின் விளைவு இது என்று லக்ஷமன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சனல் 4ஐ அனுமதித்து மஹிந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது: ஐ.தே.க