Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்நாட்டு மோதல்களினால் உயிரிழந்த, காயமடைந்த, காணாமற்போன நபர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பான தொகை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.

இன்று (நவம்பர் 28) முதல் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள இந்த தொகை மதிப்பீட்டில் 1981ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்நாட்டு மோதல்களினால் உயிரிழந்த, காயமடைந்த, காணாமற்போன நபர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் குறித்து மதிப்பீடு  செய்யப்படும்.

அரசாங்க நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொகைமதிப்பு- புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியன இணைந்து செய்யவுள்ள இந்த தொகை மதிப்பீட்டுக்கு, தேவையான ஒத்துழைப்பை மக்கள் வழங்கவேண்டும் என்று அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ. அபேகோன்  மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும் அதிகாரிகள் மேற்கூறிய விபரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பர். எனவே மக்கள் இறப்புச் சான்றிதழ், காணாமற்போனமைக்கான பொலிஸ் முறைப்பாட்டுக் கடிதம், சேதமடைந்த சொத்துக்களுக்கான ஆவணங்கள் உட்பட தங்களிடமுள்ள உரிய சட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் அதிகாரிகள் தமது பணியை முன்னெடுக்க இலகுவாக இருக்கும். இந்த தொகை மதிப்பீடு செய்வதற்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட செயலகம் மற்றும் மாகாணச் செயலகங்களிலுள்ள சுமார் 15 ஆயிரம் அரச அதிகாரிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களினால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமற்போனவர்கள் மற்றும் தேசமான சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் தத்தமது தேவைக்கேற்ப புள்ளிவிபரங்களை வழங்குகின்றனர். எனவே தொகைமதிப்பு- புள்ளிவிபரத் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிடவே இந்த தொகை மதிப்பீடு செய்யப்படுகிறது. இது, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளில் ஒன்று. அதற்கமைய நாம் தற்போது இந்த பணியை முன்னெடுக்கிறோம் என்று பி.பீ. அபேகோன்  கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு அதிகாரிகள் வந்து தகவல் பெறாதிருப்பின் எதிர்வரும் 20ஆம் திகதியளவில் கிராம சேவகர், பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மோதல் இழப்புக்கள் தொடர்பிலான தொகை மதிப்பீடு இன்று ஆரம்பித்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com