மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினாலே தமிழ் மக்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்ற நிலையினை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அபிவிருத்தி திட்டங்களும், உதவிகளும் தடைப்படும் என்கிற தோரணையில் அரசாங்கம் செயற்படுகின்றது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இராண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசும்போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இனமுரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தாலும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும் - சம்பந்தன்