திமுக தலைவர் கலைஞர் 28.11.2013 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி:- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந்தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?
கலைஞர் :- புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.
29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன. அந்தக் காவல்துறை அதிகாரி தற்போது கூறும்போது, “சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார். அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய்திருந்தேன். “எனக்குத் தெரியாது” என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன். வழக்கு விசாரணையில், “இதுபோல் வாக்குமூலம் தரவில்லை” என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதிமன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி “பாவ மன்னிப்பு” கோரியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்?
காவல் துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.
பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to பேரறிவாளனுக்கு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்