Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் அல்ல என்று அந்தக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், அதாவது செப்டம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். அது வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை 'பிரபாகரனின் பிறந்த தினமான நவம்பர் 26 இல் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம். அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கான உத்தி அல்ல. சிறீதரன் கூட அந்தத் தோரணையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை. அவரின் அன்றைய கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்ல என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடியதாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மாவீரர்கள் என்றும் சிவஞானம் சிறீதரன் நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

0 Responses to சிறீதரனின் புலிகள் தொடர்பிலான கருத்துக்கள், த.தே.கூ.இன் கருத்துக்கள் அல்ல: இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com