Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாயத்தின் தொழிநுட்ப உதவியுடன் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்வதற்காக பொதுநலவாயத்தின் மனித உரிமை பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பொதுநலவாயம் விரும்புகின்றது. அதுபோல, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளும் அதையே வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையிலேயே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதனிடையே, இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to உள்ளக விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com