கனடா, ரொறொன்ரோவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக கனடியத் தமிழர்கள் பெரும் போராட்டமொன்றை நடத்தி உள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சமயோசிதத் தலைவர் சம்பந்தன் வழிகாட்டலில் சமகாலச் சர்வதேச ஆதரவையும் பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெற்ற தருணத்தையும் கருத்திற் கொண்டு தாயகத்தில் போராட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
அதற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர் தமிழரின் தார்மீகக் கடமை. அந்த அடிப்படையில் கனடியத் தமிழர்கள் ரொறொன்ரோவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக தமது பெரும் போராட்டமொன்றை நடத்தி உள்ளார்கள்.
நில அபகரிப்பையும் இராணுவ மயப்படுத்தலையும் குறிப்பாக முன்னிலைபடுத்தி இலங்கை அரசை மிகவன்மையாகக் கண்டித்து நடந்த இப்போராட்டத்தை கனடாவின் பிரதான தமிழ் அமைப்புகளான கனடியத் தமிழர் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- கனடா, நாம் தமிழர்- கனடா, கனடாத் தமிழர் இணையம், ஆகியவற்றோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஒன்றிணைந்து மேற்கொண்டார்கள்.
கடும் குளிரையும் பாராது கடந்த வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இப்போராட்டத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் பங்குபற்றியது கனடியத் தமிழர் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14ம் திகதி ரொறொன்ரோ இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக நடந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட செய்தியும் 15ம் திகதி கொழும்பில் பொதுநலவாய மாநாடு ஆரம்பித்த போது கலந்து கொள்ளச் சென்ற அரச தலைவர்களுக்கு கிடைத்திருக்கும்.
மாநாட்டைப் புறக்கணித்த கனடாவிற்கு அவர்கள் நன்றி சொல்லியும் குரல் எழுப்பினார்கள். தமிழர் நில அபகரிப்பை நிறுத்து, இராணுவ மயப்படுத்தலை நிறுத்து, தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை நிறுத்து, அரசியற் கைதிகளை விடுதலை செய், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டு, ஊடக சுதந்திரத்தை உறுதிசெய், அரசியற் கைதிகளை விடுதலை செய், இடம்பெயர்ந்தோரை சொந்த இடத்தில் குடியேற்று, போர்க்குற்றவாளி மகிந்த பொதுநலவாய நாடுகளின் தலைவனா?, போன்ற பல்வேறுபட்ட கோசங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது வானதிர முழங்கின.
இக்கண்டனப் போராட்டத்தில் கனடியத் தேசிய நீரோட்ட அரசியல்வாதிகள் மனிதஉரிமை அமைப்புகள், பிரதான தொழிற்சங்கப் பிரதிநிதகள் எனப் பலரும் பங்குபற்றித் தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான அன்ட்ரூ காஷ், கிரெய்க் ஸ்கொட், ஜோன் மக்கே ஆகியோரும் குயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் இலங்கையின் நீதி மற்றும் சமாதானத்திற்கான அமைப்பின் பிரமுகரும் ஆன பேராசிரியர் சேறி அய்க்கன், அம்னெஸ்ரி இன்ரநசனல்- கனடா அமைப்பின் பிரமுகர் திரு ஜோன் ஆகியூ, ரொறொண்டோ- யோர்க் பிராந்தியத் தொழிற்சங்கத் தலைவர் திரு ஜோன் காட்றைட் ஆகியோர் பங்குபற்றியதோடு அங்கு இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து உரையாற்றினார்கள்.
மாக்கம் நகரசபை உறுப்பினரான லோகன் கணபதி, ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அங்குள்ள தமிழரின் அவலங்கள் பற்றி நீண்டதொரு உரையாற்றினார்.
ஒன்ராறியோ மாகாண NDP கட்சியின் தலைவர் திரு நீதன் சண் ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது இறுக்கமான நிலைப்பாட்டை வலியுறுத்தி உரையாற்றினார்.

0 Responses to தாயகப் போராட்டத்திற்கு ஆதரவாக கனடியத் தமிழரும் கண்டனப் போராட்டம் (படங்கள் இணைப்பு)