Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை சம்பூர் பாதுகாப்பு வலயத்திற்காக பொதுமக்களின் காணிகள் அரசாங்கத்தினால்

கையகப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இன்று சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கிளிவெட்டி நலன்புரி நிலையத்திற்கு முன்னாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதேச மக்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், பா.அரியநேத்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பிரதேச மக்களும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே, போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை இராணுவ புலனாய்வாளர்களினால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக ‘கொழும்பு ரெலிகிறாப்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com