உலகின் 7 ஆவது மிகப் பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடான பாகிஸ்தானில் 2007 ஆம் ஆண்டு முதல் பிரதான இராணுவத் தளபதியாகப் பணியாற்றி வந்த 61 வயதாகும் அஷ்ஃபாக் பர்வேஷ் கயானி நாளை வெள்ளிக்கிழமை பதவி விலகுகின்றார்.
மேலும் இவரது இடத்தை நிரப்பி லெப்டினன்ட் ஜெனரல் ரஹீல் ஷரீஃப் அதே தினம் பதவியேற்கின்றார்.
ரஹீல் ஷரீஃப் புதன்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபினால் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தற்போது பாகிஸ்தான் இராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பாய்வுப் பிரிவில் இன்ஸ்பெக்டராக கடமையாற்றி வருகின்றார். ஒரு இராணுவ குடும்பத்தில் பிறந்த 57 வயதுடைய ரஹீல் ஷரீஃப் இன்னொரு இராணுவ வீரரான மாஜ் ஷப்பிர் ஷரீஃப் என்பவரின் இளம் சகோதரர் ஆவார். மாஜ் ஷப்பிர் ஷரீஃப் 1971 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தார். இவருக்கு பாகிஸ்தானின் உயர் இராணுவ விருதான நிஷான் - ஏ - ஹைடடெர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டிருந்தது.
1999 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃபை பதவியில் இருந்து துரத்தி இராணுவ சதி முயற்சி மூலம் பாகிஸ்தானின் அதிபரான பர்வேஷ் முஷாரஃப் மாஜ் ஷப்பீர் ஷரீஃபைத் தனது முன் மாதிரியாகக் கொண்டு செயற்படுபவர் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பாகிஸ்தனின் புதிய இராணுவத் தளபதியாக ரஹீல் ஷரீஃப் தேர்வு:கயானி ஓய்வு பெறுகின்றார்