Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பத்திரிகை ஊடக அலுவலகம் ஒன்றிலும் வங்கி தலைமைக் காரியாலயம் ஒன்றிலும்  தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடத் தொடங்கியுள்ளனர்.

பிரான்ஸின் புகழ்பெற்ற பத்திரிகை ஊடகமான Liberation அலுவலகத்தில் இன்று நண்பகல் திடீரென உட்புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த புகைப்படவியலாளர் ஒருவரை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை அச்சுறுத்தி அவருடன் சாம்ப்ஸ் எலிசி கட்டிட வளாகத்திற்கு தப்பிச்சென்ற பின்னர் மோட்டார் சைக்கிள் நபரை விடுவித்துள்ளார்.

இதேவேளை, Societe General வங்கி தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பதுடன், பாரிஸின் மற்றுமொரு 24 மணிநேர ஊடக சேவையான BFMTV  அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இம்மூன்று தாக்குதல்களையும் நடத்தியது குறித்த ஒரே நபர் தான் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம் BFMTV அலுவலத்தில் தாக்குதல் நடத்திய போது ''அடுத்த முறை உங்களை தவறவிடமாட்டேன்'' என குறித்த தாக்குதல் நபர் எச்சரித்துச்சென்றுள்ளார்.

இன்னமும் குறித்த துப்பாக்கி தாரி பிடிபடதாதால் காவல்துறையினர் தேடுதலை துரிதப்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுவிடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளனர். பாரிஸின் அனைத்து ஊடக அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தேடுதல் இன்னமௌம் தொடர்வதாக பாரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திடீர் துப்பாக்கிச்சூடு : மர்ம நபரை பிடிக்க தேடுதல் வேட்டை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com