பீஜிங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹிக்வின்யேன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பில் நாடுகள் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஆகவே, சர்வதேச நாடுகள் தீர்க்கமான ஒத்துழைப்பினை வழங்கும் பட்சத்தில், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் முயற்சிகளை செய்யும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை தொடர்ந்தும் குற்றஞ் சாட்டி வருகின்ற நிலையில், இலங்கைக்கு நெருக்கமான நாடொன்று கருதப்படுகின்ற சீனாவும் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.
0 Responses to இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் : சீனா வலியுறுத்தல்