Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் ஆளுநர்களாக இருக்கின்றiயும், அதிகரித்த இராணுவ பிரசன்னமும் பொது மக்களின் வாழ்கையை சீர்குலைப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றதில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண அரச சேவையாளர்களும் இதனால் சரியாக பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்திருந்தன.

எனினும் தற்போது அந்த நாடுகள், இலங்கையில் நிலையான அரசியல் தீர்வு ஒன்றையும், தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்தும் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் விரைவாக தமிழ் மக்கள் சுயமரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் இராணுவ ஆளுநர்களால் பொதுமக்களின் வாழ்க்கை சீர்குலைவு! - இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com