Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை, உயிருடன் உள்ள உறவினர்களுக்கு இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் முதலில் மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

சுமந்திரனின் கருத்திற்கு ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு விளைவித்தமையே இந்த குழப்ப நிலைக்கான காரணம்.

எனினும் இதன் போது தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன், மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதர்களுக்கு உள்ள ஒரு உரிமையாகும்.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகளோ, இராணுவத்தினரோ அல்லது பொதுமக்களோ என வேறுபாடு இல்லை.

அனைவருக்கும் ஒரே விதமான கொரவம் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இறந்து போனவர்களை நினைவுகூறவும் தடை செய்யப்படுமாக இருந்தால், இலங்கையை எந்த வகையில் ஜனநாயக நாடு என்பது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

0 Responses to உயிரிழந்தவர்களுக்கு அச்சலி செலுத்த உறவினர்களுக்கு உரிமை உள்ளது - சுமந்திரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com