வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்று தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரப் போராட்டதை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வாசலில் மேற்கொண்டார்கள்.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிம் இடம் பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கி வாழும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன் தமிழ்த் தேசிய முன்னனியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம் .கே.சிவாஜிலிங்கம,; பா.கஜதீபன் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். வழமை போன்று இன்றும் உண்ணாவிரதம் இடம் பெற்ற சுற்றாடலில் சிங்களக் காவல்துறைப் புலனாய்வாளர்கள் எனப் பலரும் காணப்பட்டார்கள்.

0 Responses to மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்: பலதரப்பட்ட கட்சிகளும் பங்கேற்பு!!