Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று வியாழக்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரித்தானியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன்,  சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் அனைத்து சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட நீடித்த சமாதானத்தை எட்டுவதற்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும் என ஹேக் உறுதியளித்ததாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்தது.

கடந்த கால குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் சந்தித்தல் போன்ற முக்கியமான விடயங்களில் அடிப்படையில் தனது இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக வில்லியம் ஹேக் கூறினார்.

போர் நடை பெற்ற இலங்கையின் வடக்கு பகுதிக்கு பிரதமர் கமரூன் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகள் பார்வையிட உள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

சுமத்தப்படும் போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படையான, சுதந்திரமான விசாணைகளை நடத்த வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும் அர்த்தமுள்ள அதிகார பகிர்வுக்கான அரசியல் தீர்வை எட்டவும் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.

0 Responses to வில்லியம் ஹேக் கூட்டமைப்பினர் சந்திப்பு!! அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவேன் - வில்லியம் ஹேக்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com