Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு முன்னால், தமிழ் மக்களின் போராட்டங்கள், கூட்டமைப்பின் எதிர் பார்ப்புக்களும் தோல்வி அடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்குப் பயணத்தை மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் டேவின் கெமரூனின் வருகைக்காகப் பல ஆயிரக்கணக்கான மக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் ஒன்றுகூடி பட்டினிப் போரை வலுப்படுத்தும் முகமாக ஒன்றுகூடியிருந்தார்கள்.

கடந்த 12-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உண்ணாவிரதப் போராட்டம், அரச படைப் புலனாய்வாளர்கள் மற்றும் அரச ஒட்டுக்குழுக்களின் பல தடைககள், உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தங்களது பட்டினிப் போராட்டத்தின் மூலம் பொதுநலவாய மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு அரச தலைவர்களும், தூதுவர்களும் சிங்களத்தின் நிலப் பறிப்பின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு தமது இடங்களுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள், முயற்சிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பைத் தொலைத்த வலி வடக்கு காத்திருந்தார்கள்.
இதன் ஒரு கட்டமாக, வெள்ளிக்கிழமை (15-11-2013) மாலை வரை பிரித்தானிய பிரதமரின் வருகைக்காக ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினாகள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல ஆயிரக் கணக்கானவர்கள் காத்திருந்தார்கள்.

பிற்பகல் வேளையில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை முகாமிற்கு பிரித்தானியப் பிரதம மந்திரி தமது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். உண்ணாவிரதத்தில் இருந்த மக்கள் தமது எண்ணங்கள், சிந்தனைகள் வெற்றி பெற்ற விட்டதாக கருதிப் பாரிய எதிர்பார்ப்புடன் டேவிற் கெமரூனை வரவேற்கவும், அவரிடம் தமது குறைகளைக் கொட்டித் தீர்க்கவும் காத்திருந்தார்கள்.
ஆனால் இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய எண்ணங்கள் சிந்தனையின் பின்னால் நின்றாலும் கூட அரசின் சூழ்சியை காலையில் உணர்ந்திருந்த நிலையிலும் கூட, அதனை முறியடிக்கும் வகையில் செயற்படாமல் வெறும் முட்டாள்கள் போன்று செயற்பட்டமை உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்களைக் மிகவும் கதிகலங்க வைத்துள்ளது.

சிங்கள பேரினவாதம் பாதுகாப்பு என்ற போர்வையில், காணாமல் போனவர்களின் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப்  பிரித்தானியப் பிரதமர் சந்திக்கவிடாது தடை செய்யும் வகையில் குழப்பத்தை உண்டாக்கியதுடன், தமிழ் இனத்தின் கோடாரிக் காம்புகளாகச் செயல்படும் அரச அதிபர் மற்றும் தமிழ் அரச உயர் அதிகாரிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள புல்லுருவிகள் என அனைவரது பூரணமான ஆதரவுடன் காணாமல் போனோர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பதில் இருக்கும் தடையை உடைக்காது அதனை அரசுக்குச் சாதகமாக மாற்றவதில் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட்டிருந்தார்கள்.

தென்னிலங்கையில் இருந்து சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுடன் படையினரால்  கொண்டுவரப்பட்ட சிங்கள், முஸ்லீம் காடையர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்பதைத் தமிழ் மக்களின் போராட்டமாக அரசு காட்ட முயற்சித்ததையும் பாதுகாப்புக்கு நின்ற படையினர் பொலிசார் அதனை கட்டுப்படுத்தாது  நின்றதையும் கூட சுட்டிக்காட்டி உண்மை நிலமையை பிரித்தானிய பிரதம மந்திரிக்கு உணர்த்தி  காணாமல் போனோர் சங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்க எந்தவொரு நடவடிக்கையையும் இவர்கள் எடுக்க முன்வரவில்லை.

இதேவேளை பாரளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, படம் காட்டுவதில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக் காட்டிய ஆர்வம் மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதில் காட்டவில்லையென்பதே உண்மை இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

பிரித்தானியப் பிரதமரிடம் இடம் பெயர்ந்த மக்களைச் சந்திப்பதைத் தடை செய்வதில் ஏற்;கனவே சிங்களப் பேரினவாதம் எத்தகைய தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளுக்குப் பொதுமக்கள் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.

பிரித்தானியப் பிரதமருடன் உதயன் அலுவலகத்தில் வைத்தேனும் உண்மை நிலமையை எடு;த்துக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் மற்றும் காணாமல் போனவர்களின சங்கப் பிரதி நிதிகளையும் சந்திக்க உரிய ஏற்பாட்டை செய்திருக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்.

அதனைக் கூட உரிய முறையில் பிரித்தானியப் பிரதமரிடம் தெரிவிக்க முடியாத நிலமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காணப்பட்டுள்ளார் என்றால் இத்தகைய புல்லுருவிகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்புப் டெவிட் கெமரூனோடு செல்வதற்கு எந்த அடிப்படையில்? யார் அனுமதித்தார்கள்? என்ற பாரிய கேள்வி தமிழ் மக்களிடையே எழுத்துந்துள்ளது.

மறுபுறம் பிரித்தானியப் பிரதமர் பாரிய சிங்கள பேரினவாதத்தின் எதிர்பின் மத்தியில் தான் வடபகுதிக்கான தனது பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதும், தமிழ் மக்களுக்குச் சிங்களப் போனிவாதத்தின் அடக்கு முறைகள் பயமுறுத்தல்கள் உண்டென்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டு தான் அதிலும் யாழ்ப்பாணத்திற்;கான பயணத்தை மேற்க்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இத்தகைய தெளிவு கொண்ட ஒரு பிரதம மந்திரியிடம், சிங்கள பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட கபட நாடகங்களையும் அடக்கு முறைகளையும் எடுத்துக் கூறி உண்மைக்காகவும், தமது நியாயங்களை எடுத்துக் கூறவும் காத்திருந்த மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பை எற்படுத்த முயலாமை பாதிக்கப்பட்ட மக்களிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் நடவடிக்கைகள் மீது பாரிய சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எற்படுத்தியுள்ளன.

இது மட்டுமல்லாது பிரித்தானிய பிரதமரின் வருகைக்காக நாள் கணக்காக காதிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், எனப் பலரிடமும் பாரிய விமர்சனத்தையும் மனக் கசப்பையும் இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன், மற்றும் சுமந்திரன் போன்றோர் சம்பாதித்துள்ளார்கள் என்பதே இன்றைய சமகாலம் கணித்து நிற்கின்றது. 

-செந்தமிழினி-

0 Responses to பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு முன்னால் தமிழ் மக்களின் போராட்டங்கள் கூட்டமைப்பினால் தோற்கடிக்கப்பட்டன - செந்தமிழினி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com