Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகள் சர்வதேச நாடுகளுக்கு புலப்பட்டுள்ளன. இந்த நிலையில் சர்வதேச நாடுகள் தொடர்ந்து சிறீலங்கா மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மன்னிப்பு சபையின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரேவ்சோவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு இடம்பெற்ற காலப்பகுதியில், சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கத்தின் வித்தைகள் அனைத்தை, சர்வதேச நாடகள் புரிந்துக் கொண்டிருக்கும்.

சர்வதேசத்துக்கு ஒரு வகையிலும், உள்நாட்டு மக்களிடம் வேறு வகையிலும் நடந்துக் கொள்ளும் அரசாங்கத்தின் வித்தைகளுக்கு இனியும் சர்வதேசம் ஏமாற கூடாது.

இந்த நிலையில் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தும் வரையிலும், மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படும் வரையிலும், சர்வதேச நாடுகளின் தங்களின் அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேசத்துக்க காணப்படும் சவால் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to சிறீலங்காவின் ஏமாற்று வித்தைகள் சர்வதேச நாடுகளுக்குப் புரிந்தன – சர்வதேச மன்னிப்புச் சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com