Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு உள்நாட்டு விசாரணையும், திருப்தி அளிப்பதாக இல்லை என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

பிரத்தானிய அமைச்சரவையில் தமது சிறீலங்கா விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது.

தாம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்திருந்தால், சிறீலங்கா அரசாங்கம் தமக்கு ஏற்றாற் போல பொதுநலவாய நாடுகளை திசை திருப்பி இருக்கும்.

தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டு, வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டதாலேயே, சிறீலங்கா குறித்த அழுத்தங்களை வழங்க முடிந்தது.

எவ்வாறாயினும் உள்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை கொண்டு திருப்தி அடைய முடியாது.

இந்த விசாரணைகள் பெரும்பாலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டவை.

தங்களது குற்றங்களை தாங்களே விசாரணை செய்து, நிரபராதிகளாக காட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இனியும் இடம் தர கூடாது.

இந்த நிலையில் உரிய சுதந்திரமானதும், சுயதீனமானதுமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com