பௌத்த பிக்குகளை தாக்கிய விவகாரமொன்றில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுபல சேனா அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
கொழும்பு சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்துக்கு முன்னால் அண்மையில் பொதுபல சேனா நடத்திய ஆர்ப்பட்டமொன்றின் போது எழுந்த கைகலப்புக்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களினால் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட ஞானசேகர தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் சிலர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியன.
குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்து முன்னால் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக பொதுபல சேனா அறிவித்தது.
இதனையடுத்தே, ஞானசேகர தேரர் உள்ளிட்ட பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுக்களை நடத்தும் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே, குறித்த சம்பவம் தொடர்பில் கட்சி சகலரிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to பொதுபல சேனாவிடம் ஐ.தே.க மன்னிப்பு கோரியது