நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நேற்று வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது.
தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவு கூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள்.
12.45இற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் எமது தேசியத்தலைவரின் உரைத்தொகுப்பு இடம்பெற்றது.
பின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டு 01.35 இற்கு மணியொலி எழுப்பப் பட்டு அடுத்து அகவணக்கமும் அதனைத்தொடர்ந்து, 01.37இற்கு எங்கள் காவிய நாயகர்களுக்கு மாவிரர் குடும்பத்தினர் ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து அந்த சூரியப் புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தின்ர்.
தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்களும் அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பனவும் அத்துடன் எம் தேசத்தின் புதல்வர்கள் மீது ஒரு இறுவட்டும் வெளியிடப்பட்டது.
அத்துடன் நெதர்லாந்து தமிழ் இளையோர்களால் காட்சியும் கருத்தும் என நெதர்லாந்து மொழியில் ஓர் நிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பிக்க மிகு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டு இறுதியாக தமிழீழ தேசியக்கொடி கேயேற்றலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உணர்வுடன் பாடி சுமார் 19.00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுற்றன.

0 Responses to நெதர்லாந்தில் இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)