Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைதடி சந்தியில் அமைந்துள்ள இராணுவ மினிமுகாம் காவலரணில் நேற்று மாலை ஈகைச்சுடரேற்றிய குற்றச்சாட்டில் அப்பகுதி வர்த்தகர்கள் சிலர் இன்று காலை விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு படையினர் ரோந்துக்கு சென்றிருந்த நிலையில், அம்மினி முகாம் காலரணுள் புகுந்த சிலரே அங்கு சுடரேற்றி விட்டு மின்னலென மறைந்துவிட்டார்கள். ரோந்து முடிந்து திரும்பிய படையினர் தமது காவலரனுக்கு வந்த வேளை அங்கே ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலியும் செலுத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி, அங்கு வீதியினால் பயணித்த பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே இன்று காலை(வியாளன்) சில வர்த்தகர்கள் படைமுகாமிற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் இராணுவ முகாம்களிலும் ஈகைச் சுடர் ஏற்றும் அளவுக்கு யாழ் இளைஞர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

0 Responses to இராணுவம் ரோந்துக்குச் செல்ல முகாமில் ஈகைச் சுடர் ஏற்றியது யார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com