இலங்கையின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களையும், ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.
ஆனால், எமது குடும்ப பிரச்சினைகளை குடும்பத்திலுள்ளவர்களே பேசித் தீர்க்க வேண்டும். அதற்குள் வெளிச் சக்திகளின் தலையீட்டினை அனுமதிக்க மாட்டோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவிகள் கோரப்பட்டால் அதனைச் செய்வதற்கு தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பொதுநலவாய நாடுகளின் இறுதியில் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையின் மீது தொடர்ச்சியாக அக்கறை கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவுக்கும், அதன் ஜனாதிபதிக்கும் அரசாங்கம் நன்றி கூறுகின்றது. ஆனால், எமது நாட்டுக்கள் காணப்படும் பிரச்சினை குடும்பப் பிரச்சினை. அதனை நாமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு அனுமதி ஏதும் இல்லை. அதுபோல, தென்னாபிரிக்காவின் அனுபவங்களை எமது நல்லிணக்கத்துக்கான பயன்படுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.
எமது உள்ளக விவகாரங்களில் தலையிட்டு மத்தியஸ்தம் வகிக்காமல் தென்னாபிரிக்கா உதவிகளையும், அனுபவங்களையும் வழங்க தயாராக இருக்கின்றமை சிறப்பான விடயமாகும். இலங்கைக்கு உதவிகளையும், அனுபவங்களையும் வழங்குவதற்கு தென்னாபிரிக்கா பொருத்தமான நாடாகும் என்று பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தென்னாபிரிக்காவின் ஆலோசனைகளைப் பெறுவோம்; எமது பிரச்சினையை நாமே பேசி தீர்ப்போம்: பஷில்