Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வு கொழும்பில் இன்று வெள்ளி்க்கிழமை காலை ஆரம்பித்த அதேவேளையில்; யாழ்ப்பாணத்தின் நல்லூரில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டிருந்த நிலையிலேயே, காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் நல்லூர் கந்துசுவாமி கோவிலின் முன்னால் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் அதிக பிரசன்னங்களுக்கு மத்தியிலும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தினை சர்வதேச ஊடகங்கள் நேரடியாக பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக, பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் முக்கிய ஊடகவியலாளர்கள் மக்களிடம் நெருங்கி பேசுவதைக் காண முடிந்தது.


0 Responses to யாழில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்: சர்வதேச ஊடகங்கள் குவிந்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com