Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்களின் நலனில் அக்கறைகொண்டு நீதியையும், சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் காப்பாற்ற வேண்டும் என்று பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வில் கலந்து கொண்டு பிரித்தானிய மகாராணி சார்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலகத்தில் காணும் பிரச்சினைகளை தொடர்ந்தும் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதை கடந்து அவற்றுக்கான தீர்வினை நோக்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவே, அவசியமானது. பொதுநலவாயத்தின் நாடுகளுக்கு மகா ராணியினதும், என்னுடையதுமான வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இளவரசர் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 2005ஆம் ஆண்டு இலங்கை இருந்த நிலைகளைப் பார்க்கிற போது, இப்போது அபிவிருத்தியின் பக்கத்தில் பயணிப்பதை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to நீதியையும், சமாதானத்தையும் பொதுநலவாய நாடுகள் காக்க வேண்டும்: இளவரசர் சார்ள்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com