Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள கொழும்பு பிரகடனத்தின் மூலம் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு இலங்கையை அழைத்து செல்லும் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் துணைபோயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கதை ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. அதனை நிறைவேற்றியிருந்தால், சர்வதேச ரீதியில் இலங்கை இன்றைக்கு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்க வேண்டி வந்திருக்காது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் 1500 கோடி ரூபாய் வரிப்பணத்தை அனாவசியமாக செலவளித்து பொதுநலவாய மாநாட்டினை நடத்தி, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸூடன் இணைந்து ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் படமெடுத்து பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. ஆனால், எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாயத்தில் 53 நாடுகள் அங்கம் வகித்த போதிலும், இலங்கையின் அழைப்பை ஏற்று 27 நாடுகளின் தலைவர்களே வருகை தந்தனர். மற்றவர்கள் வரவில்லை. குறிப்பாக, இலங்கைக்கு வந்த தலைவர்களை அனுசரிப்பதற்காகவே ஒவ்வொருவருக்கும் 70 கோடி ரூபாய்களை அரசாங்கம் ஆடம்பரமாக செலவளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் துணைபோயுள்ளது: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com