மக்களிடையே நிலவிய இனம்புரியாத மௌனத்தால் கட்டப்பட்ட மாவீரர்தினம்..
புலம்பெயர் தமிழர் வாழும் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்கள் தொடங்கி தாயகம் உட்பட உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர்தினம் வழமைபோல எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளிலும் மாவீரர்தினத்தை அஞ்சலிக்க வரும் மக்கள் தொகையில் யாதொரு வீழ்ச்சியும் காணப்படாதது முதல் சிறப்பம்சமாக இருந்தது.
மாவீரர்நாளை அடித்தளமாக வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டத்தின் வீறும், வலுவும் குறைந்து போய்விடக்கூடாது என்ற தெளிவு மக்கள் மத்தியில் நிலவுகிறது என்பதையே எங்கும் அரங்குகள் நிறைந்திருந்த மக்கள் தொகை காட்டியது.
கடந்த 2009 ம் ஆண்டில் இருந்து 2012 வரை மாவீரர் தினங்கள் தொடர்பாக நிலவிய ஏட்டிக்கு போட்டிகள், சலனங்கள் யாவும் அற்றுப்போய் இனம்புரியாத மௌன நிலை ஒன்றை அவதானிக்க முடிந்தது.
இது எப்படி உருவானது இதற்கு யார் காரணம் என்று கேட்டால் காலம் என்ற ஆசான் தன்னுடைய கடமையைச் செய்யத் தொடங்கியிருக்கிறது என்பதே பதிலாகும்.
மாவீரர்தினங்கள் இனி அடுத்தகட்டத்திற்குள் நுழைய இருப்பதற்கான முதலாவது நன்நம்பிக்கை முனைபோலவே இந்த அசைவியக்கம் காணப்பட்டது.
இன்று உருவாகியுள்ள புதிய சர்வதேச அரசியல் தடகள சூழல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும், புரிதலையும் ஏற்படுத்தியிருப்பதை மாவீரர்தினத்திற்கு வந்திருந்த மக்கள் மனங்களில் வாசிக்க முடிந்தது.
அடுத்துவரும் காலங்களில் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, மக்கள் மாவீரர்கள் முன்னெடுத்த தீபங்களை அமைதியாக முன்னெடுப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அனைத்து மாவீரர்தினங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டவர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன்தான், சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற அவருடைய குரலே இந்த ஆண்டு மாவீரர்தினத்தின் அடிநாதமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
2009 ல் இருந்து மக்கள் மத்தியில் காணப்பட்ட இனம்புரியாத ஊமைக்கவலைக்கு ஆறுதல் மருந்துபோல அவருடைய உரை இருந்த காரணத்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களில் ததும்பியது.
நேற்று வாசிக்கப்பட்ட மாவீரர்தின அறிக்கைகளிலும் அதன் பிரதிபலிப்பே முக்கிய இடம் பெற்றிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
மாவீரர்தின அறிக்கைகளில் சமகால அரசியல் நிகழ்வுகளே வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது என்ற பிரகடனமே சிறப்பாக அனைவர் மனதையும் கவர்ந்தது.
அதேவேளை மாகாணசபைத் தேர்தல்களில் மக்கள் அளித்த வாக்குகள் சலுகைகளுக்காக அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டு, அதை உணர்ந்து தமிழர் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்ற வழிகாட்டலும் எச்சரிக்கையாக இருந்தது.
இத்தகைய சிறப்பம்சங்கள் இருந்தாலும் முன்னைய காலங்களைப்போல அறிக்கைகளின்பால் மக்கள் அதிக கூர்மையான நாட்டம் கொண்டார்கள் என்று அறுதியாகக் கூறமுடியவில்லை.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் வழங்கப்படும் மாவீரர்தின உரைபோன்ற வலிமை மிக்க உரை வெளிவர வேண்டும் என்று மக்கள் மௌனமாகக் காத்திருப்பதையே பொதுவாக உணர முடிந்தது.
நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிட்டாலும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற அறுதியான வேலைத்திட்டம் ஒன்றுக்கான வெற்றிடமும் தெரிந்தது.
மேலும் மக்கள் ஒரு விடயத்தில் மிகவும் தெளிவாக இருப்பதை மாவீரர்நாள் அரங்குகளின் உரையாடல்களால் உணர முடிந்தது.
எந்த நிலை வந்தாலும், விடுதலைப் போருக்காக தமது உயிரையே கொடுத்த புதல்வர்களை விட்டு விலகிவிட முடியாது என்ற தெளிவு மக்களிடையே இருந்தது.
மாவீரர்நாள் கலைநிகழ்வுகள் பரவலாக நடந்தாலும் மக்களின் கவனம் மாவீரரை அஞ்சலிக்கும் கடமையே முக்கியம் என்ற இடத்திலேயே முனைப்பிட்டு நின்றது.
மேலும் இம்முறை மாவீரர்தினம் இரண்டாகப் பிளவுபட்டு நடைபெறுகிறது, நமக்குள் இந்தப் பிளவுகள் தேவைதானா என்ற நிலை இல்லாமல் ஒற்றுமையாக நடந்ததை பலரும் பாராட்டினார்கள்.
மாவீரர்தின அரங்குகளை அமைத்தல், அதை எழுச்சியுடன் ஒழுங்குபடுத்துதல் என்ற கடமைகள் வழமைபோலவே சிறப்பாக நிறைவேற்றப்பட்டிருந்தன.
நடந்துவிட்ட கசப்பான பல விடயங்களை வெளிப்படையாக பேச முடியாத சங்கடங்கள் இருந்தாலும், அவைகுறித்த புரிதலும் தெளிவும் மக்களிடையே இருந்ததை அனைத்து மாவீரர்நாள்களிலும் நிலவிய அமைதியால் புரிய முடிந்தது.
ஈழத்தமிழினம் புதியதொரு தடத்தில் பயணிக்கத் தயாராகிறது என்பதை மௌனமாக மலர்ந்த அனைத்து மாவீரர்தினங்களிலும் உரிப்பொருளாக அவதானிக்க முடிகிறது.
அலைகள்

0 Responses to புலம் பெயர் நாடுகளில் களைகட்டிய மாவீரர்தினம்