Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆரூஷி - ஹேம்ராஜ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆருஷியின் பெற்றோர் டாக்டர். ராஜேஷ் தல்வார் மற்றும் நபூர் தல்வார் ஆகியோருக்கு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிபிஐ தரப்பில் இருவருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்குமாறும் இது அரிதானவற்றில் அரிதாக நடைபெறும் கொலைச்சம்பவம் என்பதால் இவ்வாறு அதியுட்ச தண்டனையை கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரணதண்டனை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து அலஹபாத் உயர்நீதிமன்றத்தில் வெகு விரைவில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யவிருப்பதாக தல்வார் தம்பதியினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபக்கா ஜோன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் 2008ம் ஆண்டு 14 வயது சிறுமி ஆருஷியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஜேம்ராஜும் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷின் பெற்றோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

0 Responses to ஆருஷி கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com