Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தில் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உருவாகும் வரைக்கும் பரந்துபட்ட மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் தொடர வேண்டும் என்று தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இச்செயற்பாடுகளுக்கு கட்சி பேதங்கள் இன்றி நாங்கள் ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் அரசியலைப்பொறுத்தவரையில் மக்கள் மயப்படுத்தப்பட் அரசியல் வேலைத்திட்டம்தான் ஒரு முன்னேற்றத்தினை கொடுக்கும். கடந்த வடமாகாண சபைத்தேர்தலில் மக்கள் பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக 80 வீதம் வாக்களிப்பானது யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஒதுங்கிப்போகின்ற நிலைமையில் இருந்து மிகப்பெரிய உச்சகட்ட திருப்புமுனை.இந்த திருப்புமுனையையும், உணர்வினையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மக்களை அரசியல் வேலைத்திட்டத்திற்குள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும். அந்த வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்த்தில் போராட்டங்களை நடாத்த வேண்டும்.

அந்த வகையில் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக நடாத்தும் போராட்டங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினை வழங்கி, அப்போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றது. இவற்றில் முக்கிய விடயம் என்பது மக்கள் போராட்டங்களாகும். நேற்று பொதுநலவாய மாநாடடிற்கு பிரித்தானிய பிரதமர் வருகைக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகைதரும் பிரதிநிதிக்கு ஒரு செய்தியை வழங்குகின்றோம். அரசியலில் மக்கள் பலம் எதிர்ப்புப்போராட்டங்கள் சத்தியாக்கிரகங்கள் என்பதே கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தும்.

மக்கள் அந்நாட்டு அரசாங்கம் செய்வதை எதிர்த்து போராட வேண்டும். தொடர்ச்சியாக அவ்வாறான எதிர்ப்பை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் அந்த அரசாங்கம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வழிநடத்த முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு வரும்வரைக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே சரியான பிரதிபலனைத் தரக்கூடியதாக இருக்கும். மிகப்பெரிய ஒரு இழப்பினை சந்தித்திருக்கும் மக்களை உடனடியாக அப்படிப்பட்ட போராட்ங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் வெறுமனே யாரும் வருகை தரும் போது போராட்டங்களை முன்னெடுப்பது சாத்தியமற்ற ஒன்று.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் கடுமையாக விமர்சித்தாலும் இப்படிப்பட்ட மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு மற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது ஒருகாலமும் விமர்சிக்க மாட்டோம். நாம் அதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to மக்கள் போராட்டங்கள் தொடரப்பட வேண்டும்! அழைப்பு விடுக்கிறார் கஜேந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com