இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் தென்னாப்பிரிக்கா முன்னுதாரணமாக கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சினை தொடர்பான வன்முறைகளை ஆராய்வதற்காக, அங்கு நியமிக்கப்பட்டிருந்த சத்திய மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு போன்று, இலங்கையிலும் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஜெகோப் சூமா, இந்த யோசனையை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, அது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேகொப் சூமோவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இதன் போது, சூமோ இந்த ஆணைக்குழு தொடர்பிலான யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.
0 Responses to இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் தென்னாபிரிக்கா முன்னுதாரமாகக் கொள்ளப்படும்!!