Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவில் கிளர்ச்சிப் படையினர் அதிகம் இருக்கும் பகுதிகளில் இராணுவம் விமானம் மூலம் வீசி வரும் குண்டுத் தாக்குதலில் (Barrel bombs) மட்டும் டிசம்பர் 15 இற்குள் 517 மக்கள் வரை பலியாகியிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பின் தகவல் படி கொல்லப் பட்டவர்களில் 151 பேர் சிறுவர்கள் மற்றும் 46 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் சிரியா தனது மக்கள் மீது பிரயோகித்த இரசாயன ஆயுதங்களைப் பறிமுதல் செய்து அழிக்கும் பணி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இதற்காக சிரியாவின் துறைமுக நகரமான லட்டாக்கியாவில் இருந்து இத்தாலிக் கடலோரப் பகுதிக்கு இவை கொண்டு செல்லப் படவுள்ளன. இதற்குத் தயார் நிலையில் நோர்வேயின் போர்க்கப்பல் ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு ஏற்றப் படவுள்ள இந்த இரசாயன ஆயுதங்கள் அதன் பின்னர் சர்வதேசக் கடற்பரப்பில் விசேடமாகத் தயாரிக்கப் பட்ட டைட்டானியம் டேங்கியில் இட்டு முற்றாக அழிக்கப் படவுள்ளது.

ஆயினும் சிரியாவின் இரசாயன ஆயுதங்களைக் களைந்து அழிக்கும் பணியானது அதன் காலக்கெடுவான டிசம்பர் 31 இற்குள் நிறைவேற்றுவது கடினம் என அப்பணியை முன்னெடுத்து வரும் OPCW அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவின் அலெப்போ நகரில் விமானக் குண்டுத் தாக்குதலில் மட்டும் டிசம்பர் 15 வரை 517 மக்கள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com