நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் இடமளிக்காது. அனைவரும் இலங்கையின் மக்கள் என்கிற எண்ணத்தோடு செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து ஒருங்கிணைத்த நாட்டைத் துண்டாடும் அதிகாரங்களை யாருக்கும் எந்ததொரு சந்தர்ப்பத்திலும் வழக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தென் மாகாண சபை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
மாகாண சபையோ, மத்திய அரசாங்கமோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். அதை மறந்து செயற்படுவது சரியானது அல்ல. அரச கொள்கைகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரங்களை யாருக்கும் வழங்கப்போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ