வடக்கு மாகாண சபையில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அவையினரின் ஒட்டுமொத்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த 34 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த நிலையில் ஏகமனதாக நிறைவேறியது. சில உறுப்பினர்கள் இன்றைய அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கவில்லை.
இதனிடையே, வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதங்கள் நாளை புதன்கிழமை நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண சபைக்காக 19481 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. அதன் கீழ் வருமாறே வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்