திருகோணமலை பேரூந்து நிலையத்துக்கு முன்னால் காணாமற்போனோரை தேடி கண்டறியும் குழு இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தின் மீது முகமூடி அணிந்த குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், போராட்டக்காரர்கள் பலரும் காயமடைந்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகம் பூராவும் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், காணாமற்போன உறவுகளை தேடும் குழுவினர் தமது உறவுகளின் படங்களைத் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த குண்டர்கள், “போராட்டங்களை இங்கு நடத்த வேண்டாம். யாழ்ப்பாணத்திற்கு சென்று நடத்துங்கள்“ என்று கூறி தாக்கியுள்ளனர். அத்தோடு, பதாகைகளையும், படங்களையும் கிழித்து எறிந்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டக்காரர்கள் மீது முகமூடி அணிந்த குண்டர் குழு தாக்குதல் நடத்திய போது அந்த இடத்தை சுற்றி முப்பதிற்கும் அதிகமான பொலிஸார் இருந்துள்ளனர். ஆனாலும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போராட்டகாரர்களை கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, குண்டர் குழுவின் தாக்குதலில் சிக்கி, காணாமற்போனோரை தேடி கண்டறியும் குழுவின் அமைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to திருமலையில் காணாமற்போனோரை தேடும் குழு நடத்திய போராட்டதின் மீது குண்டர் குழு தாக்குதல்