எகிப்து தனது நாட்டில் பணியாற்றி வந்த அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்களில் 4 பேரைக் கைது செய்திருப்பதாக கட்டாரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் அல்ஜசீரா நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப் பட்ட ஊடகவியலாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு எகிப்து அரசை வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது.
இக்கைது விவகாரம் தொடர்பாக எகிப்து உள்துறை அமைச்சு தகவல் தருகையில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்களை மட்டுமே தமது அரசு கைது செய்திருப்பதாகவும் கைதானவர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் என்றும் மற்றவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவித்துள்ளது. இவர்கள் கைது செய்யப் பட்டதற்கான முக்கிய காரணமாக எகிப்தின் இறையாண்மைப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக செய்தி ஒளிபரப்புச் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது.
எகிப்தில் இதற்கு முன்னரும் இவ்வாறு சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதிகளவு பேர் இவ்வாறு கைது செய்யப் படுவதற்கான முரண்பாட்டின் காரணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. எகிப்தில் சமீபத்தில் வலுக்கட்டாயமாக பதவி இறக்கப் பட்ட முன்னால் அதிபர் மோர்சியின் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைத் தற்போதைய எகிப்து அரசு ஒரு தீவிரவாதக் கட்டமைப்பாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அல்ஜசீரா செய்திச் சேவை மிக நீண்ட காலமாக முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாக இராணுவ ஆதிக்கத்துடன் எகிப்தில் ஆட்சி செலுத்தும் அரசு குற்றம் சாட்டி வருகின்றது.
இதேவேளை எகிப்தில் கைது செய்யப் பட்ட தனது 4 ஊடகவியலாளர்களினது பெயர் விபரங்களை அல்ஜசீரா அறிவித்துள்ளது மூத்த பத்திரிகையாளர் பீட்டர் கிறெஸ்டே, செய்தித் தயாரிப்பாளர்கள் மொஹமெட் ஃபாஹ்மி, பாஹெர் மொஹமெட் மற்றும் கமெரா மேன் மொஹமெட் ஃபவ்ஷி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர்.

0 Responses to அல்ஜசீராவின் 4 ஊடகவியலாளர்களைக் கைது செய்தது எகிப்து