Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சென்டெனி பிரதேசத்தில் உள்ள டீழுருசுளுநு னுர வுசயஎயடை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிபகல் 3.00 மணிக்கு 2ம் லெப்டினன் கயல்விழியின் தந்தை ஈகைச்சுடர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் தேசத்தின் புயல் பாலா அண்ணருக்கு குழந்தைகள் பெரியவர்கள் வரை சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செய்திருந்தனர்.



வாழ்நாளெல்லாம் ஈழ மண் வாழ உழைத்தாய் என்கிற தேசத்தின் குரல் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவியும், மானம் ஒன்றே வாழ்வு பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவிகளும், பாலா அண்ணன் பக்கம் இருக்கின்றேன் பாடலுக்கும், அலைகடல் ஓரம் நிலாவரும் நேரம் பாடலுக்கு ஆதிபராசக்தி மாணவிகளும், வாடா வாடா புலியே வாடா பாடலுக்கு கிரித்தே மாணவிகளும், எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப்பாடலுக்கு சோதியா கலைக்கல்லூரி மாணவிகளும் வழங்கியிருந்தனர்.


பாலா அண்ணர் நினைவுக்கவிதையை திரு. பாஸ்கரன் அவர்களும், திரு.தனபாலசிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர். சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர் தனதுரையில் தாயகத்தில் இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் பற்றியும், அயல்நாடான இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும், தாய்த்தமிழ் நாடாம் தமிழ் நாட்டிலும் இருக்கின்ற அரசியல் சூழலில் தமிழீழ மக்களின் நிலைப்பாடு பற்றியும், இந்த காலத்தில் தேசத்தின் குரல் எவ்வாறு தனது ராஐதந்திர நகர்வை நகர்த்தியிருப்பார் என்றும், 2014 மார்ச் 3ம் திகதி முதல்  nஐனீவாவில் நடைபெறப்போகும் 25 வது கூட்டத்தொடரும், நடைபெறப்போகும் பேரணியும் மிகவும் முக்கியமானதொன்றும் இப்பேரணியில் வீட்டுக்கு ஒரு தமிழராவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் கேட்கும் மாவீரர் குரல் என்கின்ற நாடகத்தை தந்திருந்தனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன்  நினைவு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.










0 Responses to பிரான்சில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 7 வது ஆண்டு நீங்காவது நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com