Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. ஆனால், செருப்பு அவர் மீது படவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலம் மிசாபர்பூர் பகுதியில் உள்ள வேகுசராய் என்ற இடத்தில் அம்மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர்,

பழைய நண்பர்களான காங்கிரசும், ராஷ்டீரிய ஜனதாதளமும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். பழையகால இருண்ட ஆட்சியை கொண்டுவரப்பார்க்கிறார்கள். அவர்கள் முன்பு ஆட்சி நடத்தியபோது மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர பயந்தனர். வெளியே வந்தால் கடத்தப்படுவோமோ என்ற பீதி இருந்தது.

பீகாரில் 15 ஆண்டுகால மோசமான நிலைக்கு அவர்களே காரணம். மீண்டும் அதே நிலையை கொண்டுவரப்பார்க்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இரவு, பகலாக பாடுபட்டு பீகாரை நல்லநிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறேன். லல்லுபிரசாத் யாதவ் சிறையைவிட்டு வெளியே வரும்போது ஏதோ சுதந்திரப் போராட்டத்திற்கு சிறை சென்றுவிட்டு வந்ததுபோல் வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு நிதிஷ்குமார் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் மீது செருப்பு வீசப்பட்டது. ஆனால், செருப்பு அவர் மீது படவில்லை.

இதையடுத்து, செருப்பு வீசப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். செருப்பு வீசியவர், போலீசில் கையில் சிக்கவில்லை. இதுகுறித்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் செருப்பு வீசியது யார் என்று விசாரித்து வருகின்றனர்.

0 Responses to முதல் அமைச்சர் மீது செருப்பு வீச்சு! குறி தப்பியது! வீசியது யார் என போலீசார் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com