விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ப.சிதம்பரம் பேசிய போது :
பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, யாழ் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. விரைவில் பிரதமர் யாழ் செல்வார்.
இலங்கை இறையாண்மை கொண்ட நாடு என்பதால், இலங்கையை பிரித்து தனிநாடு உருவாக்க முடியாது. அதனல தான் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத் தரவேண்டும் என்ற ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்ததம் உருவாக்கப்பட்டது. 13வது சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கு இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.
இதற்கிடையே இலங்கையின் இறுதிக் கட்டப் போர் நடந்து கொண்டிருந்த 2009 இல் இந்தியாவின் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. எனினும் அப்போது நாம் முன்வைத்த யோசனையை இலங்கை அரசோ விடுதலைப் புலிகளோ கேட்டிருந்தால் இன்று பிரபாகாரன் உயிருடன் இருந்திருக்க முடியும்.
இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்காது புறக்கணித்தது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எமது வெளியுறவுத் துறை அமைச்சர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றதே விவேகமான செயல். இலங்கை நாம் முற்றாக எதிர்க்க முடியாது. இலங்கையை முற்றாக புறக்கணித்திருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவைப் பேண முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 13வது அரசியல் அமைப்பு சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்தாக கூறப்படும் இனப்படுகொலைகளுக்கு நியாயமான, பக்கசார்பற்ற, முழுமையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இந்திய மத்திய அரசு ஓயாது.
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக இந்தியா மேற்கொண்ட வீடமைப்பு, கல்வி மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான நிதியுதவிகள், பங்களாதேஷுக்கு இந்தியா செய்ததை விட அதிகமாகும். பாஜக இதே அளவு செய்வார்களா என்பது சந்தேகமே. இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அரசு பெரும் பணம் செலவழித்திருக்கிறது. அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுத்திருக்கிறது எனவும அவர் தெரிவித்தார்.

0 Responses to 'விரைவில் பிரதமர் மன்மோகன் சிங் யாழ் செல்வார்' - ப.சிதம்பரம்